நயன்தாரா ரகசிய திருமணம்: கோலிவுட் பரபரப்பு!!

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் யாருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் கோலிவுட்டில் ஹாட் செய்தி. இந்நிலையில், இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாகவும், தனி குடியிருப்பில் சேர்ந்து வாழ்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தான், நயன்தாரா முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தவிர்க்கிறார். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அறம், டோரா, கொலையுதிர் காலம் படங்களில் கூட ஹீரோ கிடையாது. நயன்தாரா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேராததற்கும் கல்யாணம் செய்துகொண்டது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY