நயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி?

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது ‘96’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

மேலும், நயன்தாராவுடன் ‘நானும் ரவுடிதான்’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தார். சமந்தாவுடன் இணைந்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்ததாக, பிரபல நடிகையுடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.