நயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை

puthiya_niyamam_26116mலேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த முந்தைய படங்களான ‘மாயா’ மற்றும் ‘நானும் ரவுடிதான்’ ஆகிய திரைப்படங்கள் சென்சாரில்’UA’சர்டிபிகேட் பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கும் சென்சார் அதிகாரிகள் ‘UA’சர்டிபிகேட் அளித்துள்ளனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நயன்தாரா நடித்துள்ள ‘புதிய நியமம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்கள் முடிவடைந்து நேற்று சென்சாருக்கு சென்றது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘UA’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். தொடர்ச்சியாக நயன்தாரா நடித்த மூன்று திரைப்படங்கள் ‘UA’ சர்டிபிகேட் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.கே.சாஜன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு வினு தாமஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. மேலும் இந்த படம் 133 நிமிடங்கள் ஓடுகின்றது.

LEAVE A REPLY