நடுவர்களின் தீர்ப்பே ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது: தோனி சாடல்

dhoni-eager-to-bat-at-the-top-orderஇமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 199 ரன்களை குவித்த நிலையிலும், தென் ஆப்ரிக்க அணி 19.4 ஓவர்களில் வெற்றியை ருசித்தது. தென் ஆப்ரிக்க அணி தரப்பில் சிறப்பாக ஆடிய டுமினி 68 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த நிலையில், போட்டிக்கு பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தோல்வி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:- “ நடுவரின் சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. சில நேரங்களில் இதுவும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். டுமினியை விரைவில் வெளியேற்றி இருந்தால், மிகப்பெரும் வித்தியாசம் இருந்திருக்கும். டுமினி நேரம் ஆக ஆக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர் அணிக்கு நாம் கடும் நெருக்கடி கொடுக்க வேண்டியது அவசியம். 200 ரன்கள் என்ற பெரிய இலக்கு இருந்தும் இதை நாங்கள் சரிவர செய்யவில்லை” என்றார்.

34 பந்துகளில் 7 சிக்சர்கள் 1 பவுண்டரி உட்பட 68 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டுமினிக்கு 17 வது ஓவரில் ஒரு அழகான எல்.பி டபிள்யூ கோரிக்கையை நடுவரிடம் இந்திய வீரர்கள் விடுத்தனர். ஆனால், அதை நடுவர் நிராகரித்தார். ஆனால், இது விக்கெட் போலவே தெரிந்தது. இவைகளை குறிப்பிட்டு தோனி நடுவரின் தீர்ப்பு குறித்து விமர்சித்துள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY