நடிகை மாளவிகா சினிமாவை விட்டு ஒதுங்கியதற்கு காரணம் இதுதானா? ஸ்ரீ ரெட்டி விளக்கம்

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களை பட்டியலிட்டு காட்டி பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. இதனால் அவரை தெலுங்கு திரையுலகம் ஒதுக்கி வைத்துவிட்டது. பிறகு சென்னையில் செட்டில் ஆன அவர் தமிழ் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னைக்கு வந்துவிட்டாலும் பாலியல் தொல்லை அளிக்கும் சில நடிகர்கள், இயக்குனர்களின் விபரங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் டிவி சேனல்களுக்கும் பேட்டி அளித்துள்ளார். சென்னைக்கு வந்த நேரம் நல்ல நேரம் இனி என் வாழ்க்கையில் எல்லாமே நல்லதே நடக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தற்பொழுது, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் நல்ல மனிதர் இல்லை என்று கூறியுள்ளார். அவரை உடனே ஏதாவது மனநல மருத்துவமனையில் அனுமதியுங்கள் என்றும், உங்கள் அகராதியில் பெண்களுக்கு மதிப்பே இல்லை என்பது எனக்கு தெரியும். உங்களை பற்றிய விபரங்களையும் விரைவில் வெளியிடுவேன் சார் என்று அவரையும் மிரட்டியுள்ளார் ஸ்ரீரெட்டி.
மிஸ்டர் ராஜேந்திர பிரசாத், நீங்கள் ஏன் “மா” அமைப்பில் இருந்து 6 மாதத்தில் வெளியேறினீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஹீரோயின் மாளவிகா ஏன் திரையுலகை விட்டு விலகினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை எப்படி எரிச்சல் அடைய செய்வீர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். உங்களின் மகள் ஏன் வீட்டை விட்டு ஓடினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். நடிகை ஹேமா ஏன் உங்களுடன் சண்டை போட்டார்? இப்படி உங்களை பற்றி அனைத்துமே அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என விளாசித்தள்ளிய ஸ்ரீரெட்டி

ஒரு சீனியர் நடிகராக உங்களை மதிக்கிறேன் ஆனால் மனிதனாக அல்ல என்று கறாராக ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.