நடிகை அஞ்சலியின் பாய்பிரண்ட் அமெரிக்காவில்?

Actress-Anjali-Latest-Saree-Look-stillsஅஞ்சலி தற்போது ஐதராபாத்தில் குடியிருக்கிறார். இவர் நடித்து வந்த ‘மாப்ள சிங்கம்’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. ‘இறைவி’ என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் அஞ்சலி சென்னை வருகிறார். சூட்டிங் முடிந்ததும் விமானத்தில் ஐதராபாத் பறந்து விடுகிறார்.

அங்கு சென்ற பிறகு அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. போன் எப்போதும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் அஞ்சலிக்கு அமெரிக்காவில் பாய்பிரண்ட் இருப்பதாகவும், அவரைப் பார்க்க அடிக்கடி அங்கு பறந்து விடுகிறார் என்றும் வதந்தி பரவியது.

சமீபத்தில் சென்னை வந்த அஞ்சலியிடம் அமெரிக்கா போனீர்களா என்று கேட்டபோது…. ‘நான் ஆந்திராவில் இருக்கும் போதே அமெரிக்காவுக்கு பாய்பிரண்டை பார்க்கப் போவதாக வதந்தி பரப்புகிறார்கள். இங்கேயும் அப்படி கேட்கிறார்களா? எனக்கு அமெரிக்காவில் பிரண்ட் யாரும் இல்லை. இல்லாத ஒருவரை இருப்பதாக சொல்லி என் பெயரைக் கெடுக்கிறார்கள்’ என்று ஆவேசப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY