நடிகர் சங்க அறங்காவலராக கமல் சம்மதம்; சூர்யா 10 லட்சம் நன்கொடை!

kamalதென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அதன் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேரதலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.  வெற்றி பெற்ற அணியின் முதல் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது  நடிகர் சங்கத்தின் அறங்காவலரில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக விஷால் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறுகையில், “சரத்குமார் சார் எஸ்.பி.ஐ சினிமாஸ் உடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இன்னும்  எங்கள் நிர்வாகத்துக்கு வந்து சேரவில்லை. அது தொடர்பான ஆவணங்களை படித்து பார்த்த பின்னரே முடிவெடுக்க முடியும்.

நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எஞ்சியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எங்கள கடைமை. ரஜினிகாந்த் சார்  உள்பட பல நண்பர்கள்  ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என பெயர் மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், பெயர் மாற்றம் செய்வதில்   சட்ட ரீதியான பிரச்னைகள் உள்ளன.   தமிழ் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெயர் மாற்றம் செய்யமுடியுமென்றால், அதனை  செயல்படுத்துவோம்” என்றார்.

இதனிடையே நடிகர் சூர்யா தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY