நடிகர் சங்கத்தின் உண்மை நிலை தெரிய வரும்: விஜயகாந்த்

vijay_1791133fநடிகர் சங்கத்தில் தற்போதைய பிரச்சனை மூலம் உண்மை நிலை தெரிய வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த், அப்பொழுது “நடிகர் சங்க தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் நடிகர் சங்கத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சனை மூலம் மக்களுக்கு விரைவில் உண்மை நிலை தெரிய வரும் என்று தெரிவித்தார்.

மேலும், நான் சரத்குமார், ராதரவியை விமர்சிக்க வில்லை என்றும் நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முறைகேட்டை மட்டும் தான் விமர்சித்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கே நான் ஆதரவளிக்கப் போவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினருக்கு தனது ஆதரவை சூசகமாக கேப்டன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY