த.தே.வி.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சுரேஷ் வெளியிட சங்கரி பெற்றுக்கொண்டார்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் நல்லூரில் இன்று இடம்பெற்றது.

கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஈபிஆர்எல்எவ் சுரேஸ் அணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க, தமிழர் விடுதலை கூட்டனியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அதனை பெற்றுக்கொண்டார்.

தேர்தல் பிரசார கீதத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க, ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அதனை பெற்றுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த ஈபிஆர்எல்எவ் கட்சி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும், ஈரோஸ், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கட்சி, ஜனநாயக தமிழரசு கட்சி உள்ளிட்ட கட்சிகளையும், பொது அமைப்புக்களையும், இணைத்து தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பொன்றை ஆரம்பித்து போட்டியிடவுள்ளது.

LEAVE A REPLY