த.தே.கூ வேட்பாளர் மீது தாக்குதல்

சாவகச்சேரியில், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் நகர சபைக்கான தற்போதைய வேட்பாளருமான காசிலிங்கம் சற்குணதேவன் என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரிப் பகுதியில் பிரசார நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த போதே, மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த வேட்பாளர், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY