தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு புறக்கணிக்கப்படுவது ஏன்?- யோகேஸ்வரன்

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாணம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டடமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கில் தொண்டர் ஆசிரியர் சேவைக்கு 445 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இவ்வாறு கிழக்கு மாகாணம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட காரணம் என்ன?. எனவே, அவர்களுக்கான நியமனங்களை உடனடியாக வழங்கி, கிழக்கின் வெற்றிடங்கள் நிரப்ப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.