தைவானில் பெண்களின் காலணி போல் கண்ணாடி தேவாலயம்

Daily_News_2062298059464தைவானில் பெண்களின் காலணி போல் முற்றிலும் கண்ணாடிகளால் வடிவகைக்கப்பட்ட தேவாலயம் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. தைவானில் உள்ள சியாŒ கவுண்டி என்னும் இடத்திலேயே இந்த மிLரும் கண்ணாடி தேவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. 1960-ம் ஆண்டு பிளாக்ஃபூட் டிசிஸ் எனப்படும் பாதபுண் நோய் தைவான் மக்களை தாக்கியது. இதனால் அந்நாட்டு மக்களால் குதிகால் உயரம் கொண்ட காலணியை அணிய முடியாமல் தத்தளித்து வந்தனர். அந்த சோக சம்பவத்திலிருந்து தைவான் மீண்டதை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலும் கட்டட வடிவமைப்பில் புதுமையை புகுத்தும் வகையிலும் இந்த கண்ணாடி தேவாலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 17 மீட்டர் உயரத்தில் பல்வேறு வடிவங்களிலான நீல நிற கண்ணாடிகளை கொண்டு இந்த தேவாலயம் கட்டப்பட்டு வருகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த தேவாலயம் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே அங்கு படையயெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் கண்ணாடி தேவாலயம் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY