தேர்தல் வெற்றிக்கு விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தாதீர் கபே அறிவுறுத்தல்

உள்ளூராட்சித் தேர்தலில் வட மாகாணத்தில் போட்டியிடும் கட்சிகள் விடுதலைப் புலிகளை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கமாக ‘கபே’ கேட்டுக்கொண்டுள்ளது.

வட மாகாணத்தில் சில கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாடல்கள் இசைக்கப்படுவதாகவும் இது தேர்தல் விதிமுறைகளை மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறும் செயலாகக் கருதப்பட வேண்டும் என்றும் கபே சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கட்சிகள் தம்மையும் தமது வேட்பாளர்களையும் முன்னிறுத்தி ஆதரவு தேட முயற்சிக்க வேண்டுமே தவிர, தமது வெற்றிக்காக மக்களின் மனங்களில் தீவிரவாதத்தை விதைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் கபே கூறியுள்ளது.

LEAVE A REPLY