தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டம்

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளை விதிக்கப்பட்டுள்ள சட்ட வரையறைக்கு உட்பட்தாக முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றினார். அனுமதி இன்றி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் முடியும் வரையில் ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர் தெரிவு செய்யப்படும் வரையில் ஒரு வேட்பாளர் இன்னுமொரு வேட்பாளருக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகள் அதாவது பிரச்சார துண்டு பிரசுரங்கள், பெனர்கள் முதலானவற்றை காட்சி படுத்துதல் தொடர்பில் சட்ட விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு குறிப்பிட விரும்புகின்றேன்.

இது தொடர்பான சட்ட விதிகளை நடைமுறைப்புடுத்துவது தொடர்பான அறுவுறுத்தல்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஒருவர் தனது பிரச்சார கூட்டத்தை நடத்தும் போது பிரச்சார கூட்ட தினத்தன்று அவரது பிரச்சார பதாதைகள், பெனர்கள் முதலானவற்றை குறிப்பிட்ட கூட்டம் நடைபெறும் இடத்தில் மாத்திரம் காட்சி படுத்தவேண்டும்.

குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த எல்லை பகுதிக்குட்பட்டதாக இது இடம்பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வேட்புமனு தினம் முதல் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரையில் அதாவது (தேர்தல் முடிந்த 1 வார காலம் வரை) ஊர்வலம் நடத்தப்படுவது தடையாகும். இத்தகைய ஊர்வலங்களை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்வர். இவ்வாறு நடத்தப்படும் ஊர்வலங்களை காணொலி மூலம் பதிவு செய்து அதனை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்வர்.

வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக நன்கொடை வழங்குதல், தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்தல், வழிபாடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மூலமாக இதற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மற்றும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் போது பொலிஸாரின் அனுமதியுடனேயே பயன்படுத்த வேண்டும்.

அரசாங்க சொத்துக்களை தேர்தல் வேட்பளர்களின் பிரச்சாரங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தக்கூடாது, அரசாங்க ஊழியர்கள் அலுவலக நேரங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள ஒழுக்கக் கோவையின்படி செயற்பட்டு தேர்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.