தேர்தல் விதிமீறல்கள் குறித்து பெப்ரல் அமைப்பிற்கு 31 முறைப்பாடுகள்

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 31முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்சிகள் முன்னெடுத்துள்ள தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களைப் பயன்படுத்தி நியமனங்கள் செய்யப்படுவது குறித்து தினசரி முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை எந்ததொரு வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.