தேர்தல் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் – அமைச்சர்

ஜனாதிபதி, பிரதர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் செயற்பாடு துரிதப்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சு அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சராக இருக்கின்ற போதிலும், தனது விருப்பப்படி, தனிப்பட்டு எந்த முடிவுகளை எடுக்க முடியாது என அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பாக தேர்தல் எந்த முறையில் நடத்துவது என்ற ஒரு பொதுவான நிலைப்பாடு எட்டப்பட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்துத் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில், தீர்மானிக்கப்பட்ட திகதியில் தேர்தலை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.