தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்

பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற தெரண அருண நிகழ்சியில் தொலைப்பேசியூடாக கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத் தேர்தலை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கான இயலுமை இல்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.