தேர்தல் தொடர்பில் கபே அமைப்புக்கு 57 முறைபாடுகள்

தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 57 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, கபே அமைப்பு நேற்று(03) தெரிவித்துள்ளது.

இந்தவகையில், அரச சொத்து துஸ்பிரயோகம் மற்றும் அரச ஊழியர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமை தொடர்பில் 17 முறைப்பாடுகளும் சட்ட விரோதமான தேர்தல் பிரசாரம் தொடர்பில் 30 முறைப்பாடுகளும், கட்டடங்கள், காரியாலயங்கள் சேதப்படுத்தல் தொடர்பில் 01 முறைப்பாடும், தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் 09 முறைப்பாடுகளும் கபே அமைப்புக்கு முறையிடப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கபே அமைப்பு, கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு, அரசியல் தொடர்பிலான நிகழ்வுகளை ஆராய்ந்து வருகின்றது.

இதனடிப்படையில், நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற பெண் வேட்பாளர்கள்உரிய முறையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை அதேகட்சியில் இருக்கும் வேட்பாளர்களால் வழங்கப்படுவதில்லை.

மேலும், தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டம் தொடர்பில் தெளிவின்மை காணப்படுகின்றது.

இதனால் கபே அமைப்பு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தேர்தலில் போட்டியிடுகின்ற பெண் வேட்பாளர்கள் உட்பட ஏனைய வேட்பாளர்களுக்கும் தேர்தல் சட்டம் தொடர்பிலும் புதிய தேர்தல் முறை தொடர்பிலும் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் தெளிவூட்டல் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது.

இதனடிப்படையில் நாளையும்(04) நாளை மறுதினமும்(05) கல்முனை,மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்தத் தெளிவூட்டல் கருத்தரங்குகள் நடாத்தப்படவுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY