தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

எவராலும் பறித்துக் கொள்ள முடியாத வாக்குரிமையை பறிகொடுக்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

வாக்குரிமையை சிலர் இழக்க நேரிட்டால் அது அவர்களின் முட்டாள்தனமான செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.