தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை

தேர்தல் காலத்தினுள் சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளை ஈடுபடுத்தும் நடைமுறை உள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பங்கள் சில தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை தேர்தல்கள் ஆணையாளர் ஜெனரல் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சிறுவர்கள் தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபடுத்தப்படும் காணொளிகள், விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றின் ஊடாக அவர்களின் ஆளுமை வளர்ச்சி, மன நிலை, அடையாளம் மற்றும் சிறவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைவருக்கும் அறிவுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.