தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க் கட்சிக்கு ஏற்ற வகையில் சட்டங்களை தயாரிப்பதாக குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க் கட்சிக்கு ஏற்ற வகையில் தேர்தல் சட்டங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு முற்றுமுழுதாக எதிர்க் கட்சிக்கு சார்பாக செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.