தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று கலந்துரையாடல்

அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதற்காக அனைத்து கட்சி செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று காலை 10.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வாக்களிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வாக்கெண்ணும் நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.