தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (11) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை அனைத்து கட்சி அரசியல் பிரதநிதிகள் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது பொதுத் தேர்தலை நடத்துவது குறித்த இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.