தேர்தலை தொடர்ந்தும் தீவிரவாதத்தை போன்று தவறான செயற்பாடு

தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது தீவிரவாதத்தை போன்று தவறான செயற்பாடு என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலவும் நிலமை தேர்தலை பிற்போடுவதற்கான காரணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் நடத்தப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் மாகாண சபை தேர்தலை நடத்தவில்லை எனின் தான் தேர்தல் ஆணையாளர் பதவில் இருந்து விலகுவதாக தெரிவித்த கருத்து தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.