தேர்தலுக்கு முன்னர் மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

maithir-and-mahinda-720x480உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கு முன்னர் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் ஒன்பது அரசியல் பிரமுகர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த அரசியல்வாதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளவர்களில் அதிகளவானர்கள் தற்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY