தேயிலை ஏற்றுமதி வரியினை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்!

தேயிலை ஏற்றுமதி நடவடிக்கையின்போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியினை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் தேயிலைக்கு 3.50 ரூபா அரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.