தேசிய விருது வாங்க இப்படியெல்லாம் நடிப்பாரா சமந்தா

சமந்தா நடிப்பில் யு டர்ன், சீமராஜா 2 படங்களும் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து சமந்தா பேன்டசி காமெடி படம் ஒன்றில் 70 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கிறார்.

2014-ம் ஆண்டு வெளிவந்து சர்வதேச அளவில் பெரும் வெற்றிபெற்ற ‘மிஸ் கிரானி’ படத்தின் ரீமேக்தான் இப்படம். பிரபல தெலுங்குப் பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.

திருமணத்துக்கு பின்னும் கூட தனது படங்கள் வெற்றி பெறுவதால் தன்னுடைய கதாபாத்திர தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார். முக்கியமாக தனக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிக்கிறார். 70 வயது மூதாட்டியாக நடிக்க சம்மதித்து இருப்பது தேசிய விருது வாங்க வேண்டும் என்ற ஆசையில் தான் என கூறுகிறார்கள்.