தேசிய பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அலட்சியமாக இருந்துள்ளனர் – இராணுவத்தளபதி!

தேசிய பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அலட்சியமாக இருந்துள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்த தாக்குதலுக்கு வெறுமனே இலங்கைக்குள் எந்த திட்டங்களும் இருக்க முடியாது, நிச்சயமாக இதில் வெளிநாட்டு சக்திகள் உள்ளன.

அவர்களின் வழிநடத்தாலில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நடந்துள்ள சம்பவத்தில் யார் தவறிழைத்தது என்ற காரணியை ஒருவர் மீது சுட்டிகாட்ட முடியாது.

இதில் சகல தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும். புலனாய்வுத்துறை தகவல் கிடைத்ததில் இருந்து அத பின்னர் இதனை கையாண்ட அனைவரும் பொறுப்பாளிகள் தான்.

தேசிய பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அலட்சியமாக இருந்துள்ளனர். அரசியல்வாதிகளும் இதில் தமது கடமைகளை தவறவிட்டுள்ளனர்.

ஆகவே அடுத்தகட்டமான செய்யவேண்டியவற்றை சரியாக கையாள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.