தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி – மஹிந்த

நாட்டின் தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை பொல்ஹேன பகுதியில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடன் சுமை, பொருளாதார நெருக்கடியின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் வரவு – செலவு திட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தற்போது நாடாளுமன்றததில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான சொற்பிரயோகங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு பொருத்தமற்ற விடயங்கள் பல வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் கடன் சுமைக்குள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள், மறுபுறம் தேசிய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

தற்போதைய வரவு செலவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால். மக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். ஆகவே மக்களுக்காக இந்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும்“ என குறிப்பிட்டார்.