தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை இலங்கையில்

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.

பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அருகில் 28 ஆம் மைல்கல் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சகல வசதிகளையும் கொண்டதாகவும் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை, சிறுநீரக கலவைப் பிரிப்பு உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய வகையிலும் அமைக்கப்படும் இந்த வைத்தியசாலைக்கு 12,000 மில்லின் ரூபா செலவிடப்படவுள்ளது.

வெளி நோயாளர் பிரிவு, 200 கட்டில்களைக் கொண்ட விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல வசதிகளையும் கொண்டதாக இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY