தென் மாகாணத்துக்கு புதிய அமைச்சர் நியமனம்

தென் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன மாகாண அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

தென் மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரம், கலாச்சார மற்றும் கலைத்துறை, சமூக சேவைகள், சிறுவர் பாதுகாப்பு, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவி பிரமாண நிகழ்வின் போது தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, மற்றும் மாகாண முதலமைச்சர் சாண் விஜேயலால் உள்ளிட்டவர்களும் உடனிருந்துள்ளனர்.

LEAVE A REPLY