தூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும் – ஜனாதிபதி

மேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள் நிறைந்திருந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை ஒரேயடியாக மாற்றிவிட முடியாது என்றபோதும் நேர்மையாக செயற்படும், நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை உருவாக்கும் கஷ்டமான பணிக்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அந்த சவாலை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்க்கும் தூய அரசியல் கலாசாரத்தை நாட்டில் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகாவலி எச் வலயத்தில் உள்ள விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

என்னதான் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டபோதும் எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத பணிகளை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, அதன்மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

LEAVE A REPLY