துரோகம் இழைத்தது நாங்களா? கூட்டமைப்பா? இலங்கைக்கான ஐ.நா தூதுவராலயம் கேள்வி????

TNAஜெனிவா பிரேரணை தொடர்பில் கடுமையாக விசனமும் அதிருப்தியுமடைந்துள்ள சிவில் சமுக பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த வாரம் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதுவராலயத்தின் பிரதிநிதிகளை சந்தித்து, தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதோடு, ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு ஏகத்துக்கும் ஐ.நா பிரநிதிகளை திட்டித்தீர்த்துள்ளனர்.

ஒருபடி மேலேபோய் ‘தமிழ் மக்களுக்கு ஐ.நா துரோகம் இழைத்துவிட்டதாகவும்’ பொருமித் தள்ளியுள்ளனர்.சிவில் சமுகத்தின் எல்லை மீறிய இந்தப்பேச்சால் வேதனையும் அதிர்ச்சியுமடைந்த ஐ.நா பிரதிநிதிகள், ‘உங்களுக்கு துரோகம் இழைத்தது நாங்களா? தமிழ் தேசியக்கூட்டமைப்பா? என்று மறுகேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ஜெனிவாவில் பரிந்துரைகளை மீள்வாசிப்புக்கு விடும் போது, பிரச்சினையின் இரண்டாம் தரப்பாகிய பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் சார்பில் கலந்துகொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு (சுமந்திரன் தலைமையிலான குழு) திருத்தங்களை மேற்கொள்ளாமல் அவற்றை வழிமொழியும் சந்தர்ப்பத்தில், பிரச்சினையின் மூன்றாம் தரப்பாகிய நாங்கள் திருத்தங்களை வலியுறுத்த வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றும் ஐ.நா பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உங்கள் மக்களை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தி அமர்வுகளில் கலந்துகொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறியமைக்கு தம்மை கடிவதில் நியாமில்லை என்றும், குற்றவாளியும் எதிராளியும் ஒரு விசயத்தில் ஒத்துப்போகின்றபோது மூன்றாம் தரப்பின் தலையீடுகள் அங்கு அர்த்தமிழந்து போகும் ஜதார்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள மறுப்பது கவலை தருவதாகவும், ஆயினும் உங்கள் உணர்வுகளை தம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது என்றும் தெரிவித்துள்ள ஐ.நா பிரதிநிதிகள், முதலாம் தரப்பு – இரண்டாம் தரப்பு இந்த இரண்டு தரப்புகளையும் மீறிய மூன்றாம் தரப்பாகிய தமது முயற்சிகள் அங்கு (ஜெனிவாவில்) வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

உள்ளே அவர்கள் (ஜெனிவா அமர்வுகளில் கூட்டமைப்பினர்) நடந்துகொண்ட விதம் தமக்கு விசித்திரமாக தோன்றியதாகவும், அதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தெரிவித்த ஐ.நா பிரதிநிதிகள், அந்த காணொளியை பார்வையிட்டால் உங்களுக்கும் அது ஆச்சரியமளிக்கலாம் என்று தெரிவித்து ஒரு காணொளியையும் காட்டியுள்ளனர்.அந்த காணொளியில், மூன்றாம் தரப்பாகிய தாங்கள் உபகுழு கூட்டங்களை (இராசதந்திர கலந்துரையாடல்களை) நடத்திக்கொண்டிருக்கும் போது, கூட்டமைப்பினர் தங்களுக்குள் தாங்களே சிறு சிறு குழுக்களாக கூடி நின்று பேசிக்கொண்டிருப்பதையும், அரச தரப்பு பிரதிநிதிகளுடன் நட்பு பாராட்டிக்கொண்டிருப்பதையும் ஐ.நா பிரிதிநிதிகள் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளனர்.

LEAVE A REPLY