துரோகப் பட்டியலிலிருந்து குமார் பொன்னம்பலத்தைக் காப்பாற்றியது நாமே – கோவிந்தன் கருணாகரம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் துரோகிப் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை தாமே காப்பாற்றியதாகவும் இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறக்கக்கூடாது என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

புளொட் அமைப்பின் 20ஆவது வீரமக்கள் தினம் மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேறகண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தைக் காப்பாற்றியது நாங்கள். அதற்கு நான் சாட்சியாகவுள்ளேன். நாங்கள் அவரைக் காப்பாற்றாவிட்டால் அவர் தொடர்ந்தும் துரோகிகள் பட்டியலிலேயே இருந்திருப்பார்.

இதன்பின்னரே அவருக்கு மாமனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இருப்பினும், இன்று முகநூல்கள், இணையத்தளங்களில் போராட்டம் குறித்து முழுமையாக அறியாதவர்கள் எழுதி வருகின்றனர். ஒருசில பத்திரிகைகளைத் தவிர அனைத்துப் பத்திரிகையாளர்களும் விளக்கமின்றியே எழுதி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

LEAVE A REPLY