துருக்கி நடத்திய வான்தாக்குதலில் குர்து இன போராளிகள் 15 பேர் பலி

துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற இந்த குர்து இன போராளிகள் 30 ஆண்டுகளாக நடத்தி வருகிற ஆயுத தாக்குதல்களில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஈராக்கின் வட பகுதியிலும், துருக்கியின் கிழக்கு மாகாணங்களான டன்செலி, சீர்ட்டிலும் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்களாக, குர்து இன போராளிகளை குறிவைத்து அவர்களது பதுங்குமிடங்கள் மீது துருக்கி படைகள் வான்தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதல்களில் 15 குர்து இன போராளிகள் பலியாகி உள்ளதாக துருக்கி கூறுகிறது.

LEAVE A REPLY