துணைப் பிரதமர் பதவி இல்லை: தயாசிறி

துணை பிரதமர் பதவி தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை மறுப்பதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், துணைப் பிரதமர் என்ற தலைப்பு ஊடகங்களால் புனையப்பட்ட ஒன்று என்றும் தற்போதைய அரசாங்கத்தில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றும் உறுதியளிப்பதாக கூறினார்.

ஊடகங்கள் வதந்திகளை பரப்பிவிட்டு பின்னர் அவற்றினை உண்மை அறிக்கைகளாக மாற்ற தங்களை கேள்வி கேட்க முடிவு செய்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும் தாங்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்தே அவதானம் செலுத்தி வருவதாகவும் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டும் என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.