துணிச்சலாக நடித்ததற்காக விருது அளித்த தமிழக அரசுக்கு நன்றி: ஐஸ்வர்யா ராஜேஷ்

‘காக்காமுட்டை’ படத்தில் துணிச்சலாக நடித்ததற்காக சிறந்த நடிகை விருது அளித்த தமிழக அரசுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

2009 – 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதை ‘காக்கா முட்டை’ படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

”என் சினிமா வாழ்க்கையில் ‘காக்கா முட்டை’ மறக்க முடியாத படம். நடிக்கும் போதே படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. கதாநாயகியாக நடிக்கும் பலரும் நடிக்கத் தயங்கும் வேடம் அது. நான் துணிச்சலாக ஏற்று நடித்தேன். அதற்குரிய பரிசாக ஊடகங்கள் பாராட்டின. படமும் வெற்றி பெற்றது.

இப்போது தமிழக அரசின் விருதும் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மணிகண்டனுக்கு நன்றி. ரசிகர்களுக்கும் நன்றி. விருதின் மூலம் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ள தமிழக அரசுக்கும் நன்றி” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY