துக்ளக் ஆசிரியர் சோ கவலைக்கிடம்

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை. சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் என்.சி.பி.வடிவேல் உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் சோ ராமசாமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து ஆபத்தான நிலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY