தி.மு.க.வின்செயலாளராக டி.ஆர் பாலு நியமனம்!

தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதியின் மறைவிற்கு பின்னர், அக்கட்சியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், முதன்மை செயலாளர் பதவி டி.ஆர் பாலுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை துரைமுருகன் முதன்மை செயலாளர் பதவியை வகித்து வந்த நிலையில், குறித்த பதவி இன்று (வெள்ளிக்கிழமை) டி.ஆர் பாலுவிடம் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிகார பூர்வமான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர்மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

கட்சியின் பொருலாளர் பதவியை வகிக்கும் துரைமுருகனிடமே, செயலாளர் பதவியும் இருந்த நிலையில், தற்போது அந்தப் பொறுப்பு பாலுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாவின் பிறந்த நாள் மற்றும் அடுத்தடுத்த தேர்தல்கள் என்பன இடம்பெறவுள்ள நிலையில், கட்சியின் பொறுப்புக்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், அவசரமாக இந்தப் பதவி பாலுவிடம் வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.