திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி

நடிகர் மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அனுஷ்கா மாதவன் கூட்டணியில் 2006-ஆம் ஆண்டு ரெண்டு திரைப்படம் வெளியானது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். விக்ரம் வேதா திரைப்படத்தில் கலக்கிய பிறகு ஒரு இடைவெளி விட்ட மாதவன், தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்ற பிறகு ‘சைலன்ஸ்’ பட வேலைகள் ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக வந்த வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.