திருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு

திருமணத்துக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா என்று தெலுங்கு மீடியாக்களில் செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் இன்னொரு செய்தியும் வந்து இருக்கிறது. சமீபகாலமாக தான் ஒப்புக்கொள்ளும் படங்களில் நெருக்கமான காட்சிகளோ, கவர்ச்சி காட்சிகளோ இல்லாத மாதிரி பார்த்துக்கொள்கிறார்.

கதை சொல்ல தொடங்கும்போதே இந்த 2 கட்டுப்பாடுகளையும் இயக்குனர்களிடம் விதித்து விடுகிறார் அனுஷ்கா. காரணம் திருமணம் ஆகவிருப்பது தான் என்கிறார்கள். சமந்தா திருமணத்துக்கு பின் முத்த காட்சிகளில் நடித்தது சர்ச்சையை உண்டாக்கியது. அந்த படம் திருமணத்துக்கு முன்பே ஒப்புக்கொண்டது.

எனவே அதேபோன்ற சர்ச்சைக்குள் சிக்க அனுஷ்கா விரும்பவில்லை. எனவே தான் திருமணமாகும் சமயத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள்.

LEAVE A REPLY