திருமணத்திற்கு பின் நமீதாவின் முக்கிய முடிவு

திருமணத்துக்கு பின் நடிக்க வந்து இருக்கும் நமீதா இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, முன்பு போன்று கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

தற்போது என் கவனம் முழுக்க என் சினிமா கேரியர் மீது தான் உள்ளது. மீ டூ என்ற பெயரில் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றார்கள். தங்களுக்கு நடந்த வி‌ஷயம் பற்றி வெளியே சொல்ல துணிச்சல் வேண்டும்.

இதில் உண்மை எது, பொய் எது என்று பார்க்காமல் புகார் தெரிவிக்கும் பெண்களை கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். முதலில் பெண்கள் கூறும் மீ டூ புகாரை கேளுங்கள். அதன் பிறகு அதில் உண்மை இருக்கிறதா என்று விசாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.