திருமணத்திற்கு தயாராகி விட்டாரா ஸ்ருதிஹாசன்?

நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன், தற்போது பட வாய்ப்பு இன்றி உள்ளார். முதன்முறையாக தனது தந்தை கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த படம் கிடப்பில் கிடக்கிறது. விரைவில் அவர் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகயிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஸ்ருதி, லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்வரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன், மைக்கேல் கார்சலை தன் தயாரான சரிகாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். சரிகாவும், பூங்கொத்து கொடுத்து கார்சலை வரவேற்றார். தற்போது இந்த போட்டோக்கள் பாலிவுட் மீடியாக்களில் வைரலாகியிருக்கிறது. விரைவில் ஸ்ருதியும், மைக்கேலும் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்கான சந்திப்பாகத்தான் இது இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY