திருத்திய 20தையும் ஏற்க முடியாது! – சுரேஸ்

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட வரைவையும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இன்று கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்ட வரைவை அரசு நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தது. அதற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அரசு அதில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்திருந்தது. நேற்று கிழக்கு மாகாண சபையில் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்ட வரைவையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY