திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடம்பெற்று வருகிறது.

குறித்த சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனது இல்லத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணநாயகம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், வடக்க மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்

குறித்த சந்திப்பில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சி சார்ந்த பிரச்சினை என்பன தொடர்பாகவும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது