திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக, லங்கா சமசமாசக் கட்சியின் பொதுச்செயலரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“இதுதொடர்பான இருதரப்பு உடன்பாடு, ஏற்கனவே சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதற்கமைய திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் அமைக்கப்படவுள்ளது.

இதனால், நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.