திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் கொண்டு வரப்படும்: கனிமொழி

i3.phpதமிழகத்தில் நூலகங்களின் எண்ணிக்கையை விட, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாவும், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் கொண்டு வரப்படும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் மாவட்ட திமுக மகளிர் அணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கனிமொழி, தமிழகத்தில் பெண்களுக்கும், முதியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படாது என்று அதிமுக அரசு அறிவித்துள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் கொண்டு வரப்படும் என்றார். திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY