திமிரு பிடிச்சவன்’ விஜய் ஆண்டனிக்கு ஜோடியான நிவேதா பெத்துராஜ்

‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.

‘காளி’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் படம் ‘திமிரு பிடிச்சவன்’. கணேசா இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘நம்பியார்’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இன்று இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் நடித்த ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘பார்ட்டி’ படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY