தினக்குரல், வலம்புரிப் பத்திரிகைகள் உண்மையை வெளியிடுவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்!

தினக்குரல் மற்றும் வலம்புரி தமிழ் நாளிதழ்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிடுவதால் அவற்றைத் தான் வாசிப்பதில்லையெனவும், உண்மையான செய்திகளை வெளியிடும் நாளிதழ்களையே தான் வாசிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குறித்த நாளிதழ்களில் நீதியமைச்சில் எம்.ஏ.சுமந்திரன் தலையீடு செய்வதாக முன்னாள் நீதியமைச்சர் குற்றம் சாட்டியதாக, நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் இக்கருத்துத் தொடர்பாக வினவப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தான் நீதி அமைச்சில் தலையிடமுடியாது எனவும், அவ்வாறான செய்தியை தான் இதுவரையும் கேள்விப்படவில்லையெனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது இவ்வாறு பத்திரிகைகளில் செய்தி வெளியானதே எனக் கேள்வி எழுப்பியபோது தான் உண்மைக்குப்புறம்பாக செய்தி வெளியிடும் தினக்குரல், வலம்புரிப் பத்திரிகைகளை வாசிப்பதில்லையெனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY