‘திட்டம் அறிந்ததாலேயே லசந்த கொலை செய்யப்பட்டார்’

கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான திட்டமொன்றை, முன்கூட்டியே அறிந்துக் கொண்டதன் காரணமாகவே சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என, சுகாதார அமைச்சர் ராஜித சோனரத்ன தெரிவித்தார்.

கொழும்பு கம்பல் மைதானத்தில் நேற்று (07) நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“உக்ரைன் நாட்டுடன் மஹிந்த அரசாங்கம் மேற்கொள்ளவிருந்த முறைகேடான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த அறிந்திருந்தார். இதையடுத்தே, குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவர் கொலை செய்யப்பட்டார்.

“அதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த வேளை, லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார்” என்றார்.

LEAVE A REPLY